"முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் தமிழகத்திற்கு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு''

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டது. தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதலமைச்சராக்குவோம் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தனது நோக்கம் எனக்கூறியிருப்பது தொடர்பாக நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும், தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ஒவ்வொருவர் கருத்திற்கும் பதில் சொல்ல முடியாது என்றும், மதத்தால் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதே தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு என்றார். ஆட்சியாளர்கள் ஊழல் செய்து சுமையை மக்கள் மீது திணிப்பதாகவும், இதனால் நாடும், மக்களும் கடனில் உள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...